வளைகுடா:
வெளிநாட்டிலிருந்து LCD / LED டிவி எடுத்து வந்தால் வரி எவ்வளவு :

LCD / LED TV - க்கான கஸ்டம்ஸின் வரிவிதிப்பு லிஸ்ட்2016/Indian Airport Customs Duty on LCD/LED Televisions 2016:
வெளிநாடுகளில் பணிபுரிந்து விட்டு தாயகம் திரும்புவோர் கையோடு LCD / LED தொலைக்காட்சிப் பெட்டிகள் எடுத்து வந்தால் இந்தியாவில் சுங்க வரி எவ்வளவு விதிக்கப்படும் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். முன்பெல்லாம் 32 இன்ச்சிற்குக் குறைவாக உள்ள டிவிக்கள் எடுத்து வந்தால் வரி இன்றி அனுமதித்து வந்தார்கள்.
ஆனால் கடந்த 26, ஆகஸ்ட் 2013 முதல் இந்தியாவில் அனைத்து வகையான LCD / LED டிவிக்களுக்கும் கட்டாய வரி விதிப்பு அமல் படுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி வழிகாட்டுதல் மதிப்பிலிருந்து 36.05% வரியாக விதிக்கப்படும். வழிகாட்டுதல் மதிப்பு என்பது அரசாங்கம் எந்தெந்த பிராண்டுகளுக்கு எவ்வளவு என்று ஒரு மதிப்பினை தயாரித்து வைத்துள்ளது. அதன்படியே இந்த வரி விதிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் வசித்து விட்டுத் திரும்புகிறவர்களுக்கு வரி விதிப்பில் குறிப்பிட்ட தொகை தள்ளுபடி என்று ஒரு விதி இருக்கிறது. ஆனால் இதில் LCD/LED டிவிக்கள் சேராது என்பது புதிய விதிமுறை.
அதன்படி எவ்வளவு சிறிய அளவிலான LCD/LED டிவிக்களை எடுத்து வந்தாலும் அதற்கு வரி உண்டு:
நீங்கள் எந்தத் தொகைக்கு அந்த டிவியை வெளிநாட்டில் வாங்கியிருந்தாலும் சரி.. வரி விதிப்பு இந்திய அரசாங்க வழிகாட்டுதல் மதிப்பின்படி தான் விதிக்கப்படும். இதில் இல்லாத பிராண்டுகளை எடுத்து வந்தால் இதில் உள்ள குறைந்தபட்ச வரி கட்டாயம் உண்டு. அதைத் தவிர சம்பந்தப்பட்ட சுங்க அதிகாரியின் மதிப்பீட்டின் படி கூடுதலாகவும் வசூல் செய்யும் அதிகாரம் அவருக்குண்டு.
எடுத்து வரும் டிவியின் அளவு, மாடல் ஆகியவற்றை கஸ்டம்ஸ் படிவத்தில் (Customs Declaration Form) முழுமையாகப் பூர்த்தி செய்து, “வரி செலுத்த வேண்டியிருகிறது” என்று கூறி கஸ்டம்ஸ் வரி விதிப்பு சிவப்புக் கதவு வழியாகச் சென்று அதிகாரிகளிடம் காட்டி வரியைக் கட்டிச் செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் பச்சைக் கதவு வழியே சென்று சுங்க அதிகாரிகளிடம் பிடிபட்டால் வரி விதிப்பிற்கு மேல் தண்டனைக் கட்டணமும் உண்டு.

No comments:
Post a Comment