Wednesday, 3 August 2016

சவுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார் தமிழக முதல்வர்:

சவுதி:தமிழகம்

    சவுதி அரேபியாவில் பணிபுரிந்த போது, முதுகு தண்டுவடத்தில் பலத்த காயமடைந்த தாட்சாயிணிக்கு, முதலமைச்சர் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
       சென்னை தண்டையார்பேட்டையைச் தாட்சாயிணி என்பவர் ஏழ்மை காரணமாக சவுதி அரேபியாவுக்கு பணிக்கு சென்றார். அங்கு பணிபுரிந்த இடத்தில் ஏற்பட்ட கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காக,  வீட்டு பால்கனியில் இருந்து குதித்ததில், அவரது முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சவுதி அரேபிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, தன்னார்வத் தொண்டு நிறுவனம் மீட்டு இந்தியா அனுப்பி வைத்தது.
    இந்நிலையில் தாட்சாயிணியின் குடும்ப சூழ்நிலை, உடல்நிலையை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கிடவும், உயர்தர சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டார். இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த சந்திப்பில்,10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தாட்சாயிணி மற்றும் அவரது தாயாரிடம் முதலமைச்சர் வழங்கினார்.

No comments:

Post a Comment