ஜாகிர் நாயக்கின் அரசு சாரா நிறுவனம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை
சமீபத்தில் டாக்காவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன் மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தான். ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து தற்போது சவுதியில் இருக்கும் ஜாகிர் நாயக்கின் பேச்சுகள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் ஜாகிர் நாயக் நடத்திவரும் அரசு சாரா நிறுவனமான ‘இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை’யின் பின்னணி மற்றும் நிதி பரிமாற்றம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு இருப்பதாக அத்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு, பிரிட்டன், சவுதி மற்றும் சில கிழக்காசிய நாடுகளிலிருந்து தொடர்ந்து நிதி அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து 15 கோடி ரூபாய் நன்கொடையாக வந்துள்ளது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நன்றி: தமிழ் செய்திகள்.
No comments:
Post a Comment