Saturday, 16 July 2016

கங்கை நீர் புற்று நோயை உண்டாக்கும்: ஆய்வு.


புதுடெல்லி:
   புனித நதியாக கருதப்படும் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு களாகிவிட்ட  நிலையில், தற்போது கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும்  கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய  காரணிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பல லட்சம் இந்தியர்களின் ஜீவநதியாக விளங்கும் கங்கை,இந்துக்களின் புனித  நதியாகவும் கருதப்படுகிறது.
இந்த நதியில் மூழ்கி எழுந்தால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற  நம்பிக்கையில்,தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித நதியில் மூழ்கி எழுகின்றன்ர்.
அதே சமயம் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின்  உடலை கங்கை நதியில் விட்டுவிடுவதாலும், தினமும் இறந்தவர்களின் அஸ்தியை  அங்கு கரைப்பதாலும் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.
தற்போது கங்கை நதிக்கு செல்பவ்ர்கள் புனித நீராடலாம் என்று மூழ்கி  எழுந்தால்,அவர்களை உரசிக்கொண்டு ஒரு பிணம் மிதந்து செல்வதை சர்வ சாதாரணமாக காணலாம்.
இந்நிலையில், இந்த அளவுக்கு மாசடைந்துபோயிருக்கும் கங்கை நீரில், புற்றுநோயை  உண்டாக்கும் கார்சினோஜென்ஸ்(carcinogens)எனப்படும் புற்று நோயை  உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
தேசிய புற்றுநோய் பதிவு மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியிலேயே இத்தகவல்  தெரியவந்துள்ளது.
குறிப்பாக கங்கை நதியையொட்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு,நாட்டின்  பிறப்பகுதிகளில் வசிப்பவர்களை காட்டிலும் மிக எளிதில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு  அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்கை நீரில் மிக அதிக உலோகத்தன்மையும்,நச்சு ரசாயனமும்,குறிப்பாக  உத்தரப்பிரதேசம்,பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள கங்கை நதி படுகை  பகுதிகளில் இது அதிகமாக காணப்படுவதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/india/10838.art

No comments:

Post a Comment