Friday, 1 July 2016

பூண்டு, கிராம்பு, மஞ்சளை தினமும் இரவு பாலில் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!


சின்ன சின்ன உடல்நல, ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு எல்லாம் மருத்துவரிடம் செல்பவரா நீங்கள்? அப்படியானால் இதை நீங்கள் கண்டிப்பாக படித்தே ஆகவேண்டும்.
ஆம், இன்று பலரும் தும்மல் வந்தால் கூட, மருத்துவரிடம் சென்றுவிடுகின்றனர். காரணம், வீட்டு மருத்துவம் என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது.
உங்கள் சமையலறையில் இருக்கும் கிராம்பு, பூண்டு, மஞ்சள், இந்த மூன்று பொருட்களே போதும். ஆம், இவை மூன்று மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்த உணவுப் பொருட்கள் ஆகும்.
மூன்று பூண்டு, இரண்டு டீஸ்பூன் மஞ்சள், மூன்று கிராம்பு, இவை மூன்றையும் நன்கு அரைத்து சுடுதண்ணீர் அல்லது இதமான பாலில் கலந்து இரவில் குடித்து வந்தால் கீழ்வரும் ஏழு உடல்நல குறைபாடுகளுக்கு சிறந்த தீர்வுக் காண முடியும்...
கிராம்பு, பூண்டு, மஞ்சள் இந்த மூன்றின் கலவை, சைனஸ் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கவல்லது. மூக்கடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் இவற்றின் மூலம் ஓர் நல்ல தீர்வுக் காண முடியும்.
கிராம்பு, பூண்டு, மஞ்சளின் கலவை, வயிற்றில் சேரும் அமிலதன்மையின் அளவை குறைக்க, சீராக இருக்க உதவுகிறது. இதனால், குமட்டல், வாயுத்தொல்லை, வயிறு வலி போன்றவற்றில் இருந்து தீர்வுக் காண இது சிறந்தது.
ஆண்டி-அழற்சி மூலப்பொருள் கொண்டுள்ள இந்த மூன்றும். உடலுக்குள் ஏற்படும் நோய் கிருமி தொற்றுகளை அழிக்கவல்லது.
மூலிகை தன்மையுள்ள இவை, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் பொருட்கள் ஆகும். டைப் 1 வகை நீரிழிவு உள்ளவர்கள் இவற்றை தாராளமாக உட்கொள்ளலாம். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இது உதவும்.
கிராம்பு, பூண்டு, மஞ்சளின் இந்த கலவை, உடலில் இருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்க உதவுகிறது. இதனால் உடலில் தேங்கும் தீய கொலஸ்ட்ராலை எளிதாக குறைக்க முடியும்.
உங்கள் டயட்டில் சீராக இந்த மூன்று உணவு பொருட்களையும் சேர்த்து வந்தால், உடல் அதிகரிப்பதை தடுக்க முடியும். மேலும், உடற்பயிற்சியுடன் இதை கடைப்பிடித்து வந்தால் உடல் எடையை குறைக்க முடியும்.
கிராம்பு, பூண்டு, மஞ்சள் இந்த மூன்றிலுமே ஆண்டி-பயோடிக் அதிகம் இருக்கின்றன. இது, சரும அலர்ஜி, சுவாசக் குழாய் அலர்ஜி போன்றவற்றில் இருந்து நிவாரணம் அடையவும் உதவுகின்றன.

No comments:

Post a Comment