Sunday, 1 May 2016

பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் மா.கோவிந்தராசு தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுத்தாக்கல் :: திரளான பேராவூரணி அஇஅதிமுக தொணடர்கள் பங்கேற்பு.


பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியில் ஏப்.16 ஆம் தேதி தமிழகசட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பேராவூரணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்யத்தொடங்கியுள்ளனர்.
இந்த வரிசையில் பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் மா.கோவிந்தராசு பேராவூரணி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து வேட்பாளளுக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.
இந்த வேட்புமனுத்தாக்கல் நிகழ்வில் திரளான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.இதன்பின்னர் அதிமுக வேட்பாளர் மா.கோவிந்தராசு பேராவூரணியின் கடைவீதிகளில் வாக்குசேகரித்தார்.
தமிழகத்தின் 233 தொகுதிகளில் ஒரே நேரத்தில் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment