Sunday, 1 May 2016

பேராவூரணியில் வேட்புமனு தாக்கல் செய்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தமயந்தி திருஞானம் :: தன் பெயரில் எந்த சொத்தும் இல்லை என வேட்புமனுவில் தகவல்.


பேராவூரணி
சட்டப்பேரவைத்தொகுதி
எதிர்வரும் மே.16 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத்தேர்தலை
சந்திக்கவுள்ள நிலையில்
வேட்புமனு தொடங்கி பல
நாட்களாகியும் யாரும்
வேட்புமனு தாக்கல்
செய்யாமலே இருந்தனர்.
தமிழகம் முழுவதும் எதிர்வரும் 29.05.2016 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல்
நிறைவடையவுள்ள நிலையில் மக்கள் நலக்கூட்டணி-தேமுதிக
கூட்டணியின் சார்பில்
போட்டியிடும் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த
தமயந்தி திருஞானம் இன்று தனது வேட்புமனுவை பேராவூரணி வட்டாட்சியர்
அலுவலகத்தில் தேர்தல்
நடத்தும் அலுவலரிடம் சமர்பித்தார்.
வேட்புமனுவை தாக்கல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதி
வேட்பாளர் தமயந்தி திருஞானம் வேட்பாளருக்கான
உறுதிமொழியையும்
எடுத்துக்கொண்டார்.
பேராவூரணி வட்டாட்சியர்
அலுவலகத்தில் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின்
பேராவூரணி
சட்டப்பேரவைத்தொகுதி
வேட்பாளர் தமயந்தி திருஞானம் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தன் பெயரில் எந்த சொத்தும் இல்லை என
தெரிவித்துள்ளார்.
பேராவூரணியை
அடுத்த பெரியநாயகிபுரத்தை சேர்ந்த 51 வயதாகும் இவர், சுய உதவிக்குழுவில்
ரூ.12,000 கடன் பெற்றுள்ளார். மேலும் இவரது கணவருக்கு ரூபாய் 6,40,000-க்கு அசையும் சொத்துக்களும், 1,00,000 ரூபாய்க்கு அசையும் சொத்துக்களும், சுயமாக சம்பாதித்த
சொத்தாக ரூ.4,20,000
மதிப்புள்ள சொத்துக்கள்
உள்ளன. மேலும் ரூ.1,00,000 ரூபாய்க்கு
பூர்விக சொத்துக்களும்
உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இவர் TATA Sumo காரும். ஒரு Hero Passion பைக்கும் வைத்துள்ளதாக இந்த வேட்புமனுவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
வேட்பாளர் தமயந்தி திருஞானம் அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.7426 உள்ளதாகவும், அவரது கணவரின் வங்கி கணக்கில் ரூ.7,19,327 ரூபாய் உள்ளதாகவும் இந்த வேட்புமனுவில்
கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment