Sunday, 1 May 2016

பேராவூரணி திமுக வேட்பாளர் என்.அசோக்குமார் வேட்புமனுத்தாக்கல் :: தன் பெயரிலும், துணைவி பெயரிலும் ₹6.83 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளதாக வேட்புமனுவில் தகவல்!!


பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியில் எதிர்வரும் மே.16 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர். இதனை தொடர்ந்து பேராவூரணியில் பல அரசியல் கட்சியினரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவந்தனர்.
இதைப்போலவை பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பேராவூரணி பேரூராட்சித்தலைவர் நா.அசோக்குமார் தனது வேட்புமனுவை பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்பித்தார். இதனைத்தொடர்ந்து வேட்பாளருக்கான உறுதிமொழியையும் அவர் ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து திரளான திமுக தொண்டர்களுடன் பேராவூரணி நகர வீதிகளில் திமுக வேட்பாளர் அசோக்குமார் வாக்குசேகரித்தார்.
பேராவூரணி திமுக வேட்பாளர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தன் பெயரிலும், தனது துணைவி பெயரிலும் ரூ.6.83 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வேட்புமனுவின் படி, திமுக வேட்பாளர் அசோக்குமார் மற்றும் அவரது துணைவிக்கு அசையும் சொத்துக்கள் ₹1,07,19,677 கோடி (₹8053602+2666075) ரூபாய்க்கு உள்ளதாகவும், அசையா சொத்துக்களில் சுயமாக வாங்கிய சொத்தின் கொள்முதல்விலை மதிப்பு ₹33,06,000 (₹13,00,000+₹20,06,600) லட்சம் எனவும், அசையா சொத்தில் மேம்பாட்டு மதிப்பு ₹40,000 ரூபாய் எனவும், மொத்த அசையா சொத்தின் தோராய மதிப்பு ₹2,22,65,835 கோடி (₹1,13,94,835+₹1,08,71,000) எனவும், சுயமாக வாங்கிய சொத்து ₹2,25,00,000 கோடி (₹1,15,00,000+₹1,10,00,005) எனவும், பூர்விக சொத்து ₹95,50,000 லட்சம் என மொத்தம் ₹ 6,83,81,512 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment