Sunday, 1 May 2016

பேராவூரணி அருகே ₹85,400 ரூபாய் பறிமுதல் :: ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்து பேராவூரணி தேர்தல் அதிகாரிகள் அதிரடி.


பேராவூரணி அருகே அலிவலம் என்ற இடத்தில் ரூ. 85,400-ஐ பறக்கும் படை அலுவலர்கள் வியாழக்கிழமை பறிமுதல்
செய்தனர்.
பேராவூரணி நிலை கண்காணிப்பு குழு
அலுவலர் பூவந்திநாதன்
தலைமையில் பறக்கும்படையினர்
அலிவலத்தில் வாகனச்
சோதனையில்
ஈடுபட்டிருந்தனர்.
பட்டுக்கோட்டையிலிருந்து
திருச்சிற்றம்பலம் நோக்கி சென்ற காரை நிறுத்தி
சோதனையிட்டதில்,காரை உப்புவிடுதி பகுதியைச் சேர்ந்த வெ.சேதுராமன் என்பவர் ஓட்டி வந்தததும்,அதில் உரிய
ஆவணமின்றி கொண்டு
செல்லப்பட்ட ரூ. 85,400
இருந்ததும் தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்து பேராவூரணி உதவி தேர்தல் அதிகாரி கோ.ரகுராமனிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment