Sunday, 1 May 2016

புதுப்பட்டினம் அருகே சாலைவிபத்தில் விவசாயி பலி :: சேதுபாவாச்சத்திரம் காவல்துறையினர் விசாரணை.  


புதுப்பட்டினம் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார். 
புதுப்பட்டினம் அருகே உள்ள இரண்டாம்புளிக்காடு
கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (65) விவசாயி. வெள்ளிக்கிழமை மாலை வெளியூர் செல்வதற்காக தனது கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர
வாகனம் கந்தசாமி மீது மோதியது. இதில் பலத்த
காயமடைந்த அவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment