Friday, 8 April 2016

அதிரை கல்லூரியில் ஆங்கில இலக்கியக் கழக ஆண்டு விழா

DINAMANI·

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கியக் கழகத்தின் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி துணை முதல்வர் உதுமான் முகைதீன் தலைமை வகித்தார். பேராசிரியர் எம். சிக்கந்தர் பாட்ஷா, பேராசிரியைகள் எம். ஏ. தஸ்லீமா, இ. பிலோமினா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் ஏ. முகம்மது முகைதீன் தலைமை விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்த் துறைத் தலைவர் கலீலுர் ரஹ்மான் வாழ்த்துரை வழங்கினார்.
தலைமை விருந்தினராக கலந்து கொண்ட ஆந்திர மாநிலம், திராவிடன் பல்கலைக் கழக ஆங்கிலத் துறை பேராசிரியர் முனைவர் பி. திருப்பதிராவ் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் விழாவில் பங்கேற்றனர்.
கல்லூரி இளங்கலை இரண்டாமாண்டு மாணவர் ஏ. ஐயப்பன் வரவேற்றார். முதுகலை முதலாமாண்டு மாணவிகளான ஐஸ்வர்யா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆர். நாகஜோதி நன்றி கூறினார்

No comments:

Post a Comment