Friday, 8 April 2016

5 குழந்தைகளின் தாய் சரமாரி குத்திக்கொலை கணவர் வெறிச்செயல்.

DINAKARAN·

அதிராம்பட்டினம், : அதிராம்பட்டினம் அருகே 5 குழந்தைகளின் தாயை கத்தியால் குத்திக்கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டத்தை சேர்ந்தவர் சித்திரவேல்(40). மீனவர். இவரது மனைவி இளஞ்சியம்(33). இவர்களுக்கு மணிகண்டன்(13), சூர்யா(12), காளி(10) ஆகிய 3 மகன்களும், வழுதியம்மாள்(4), ஐஸ்வர்யா(2) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
சித்திரவேல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். நேற்றுமுன்தினம் இரவு 10 மணி அளவில் வழக்கம்போல் போதையில் வந்த சித்திரவேல், மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் சித்திரவேல் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியின் நெஞ்சில் சரமாரி குத்திவிட்டு ஓடிவிட்டார். இதை பார்த்து குழந்தைகள் அலறியதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.
அப்போது வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் இளஞ்சியம் இறந்து கிடந்தார். இதுபற்றி இளஞ்சியத்தின் தங்கை முல்லையம்மாள் கொடுத்த புகாாின்போில் அங்கு வந்த போலீசார் இளஞ்சியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து தப்பி ஓடிய சித்திரவேலை தேடி வருகின்றனர்

No comments:

Post a Comment