பேராவூரணி: தஞ்சை மாவட்டம் பேராவூரணி -ஆவணம் சாலையில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான தேங்காய் மட்டையிலிருந்து நார் பிரித்து எடுக்கும் தொழிற்சாலை உள்ளது. இதை ஆலங்குடியை சேரந்த நாகராஜன் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். நேற்று பட்டுக்கோட்டையை சேர்ந்த நாடி என்பவருக்கு சொந்தமான லாரியில் சேலத்துக்கு கொண்டு செல்வதற்காக நார் கட்டுகள் ஏற்றப்பட்டது. அப்போது லாரி டிரைவர் உணவு சாப்பிடுவதற்காக சென்றிருந்தார்.
திடீரென அங்கிருந்த நார் குவியல் தீப்பிடித்ததில் மளமளவென தீ பரவி தொழிற்சாலையும், நார் ஏற்றப்பட்டிருந்த லாரியும் முற்றிலும் எரிந்து நாசமானது. பேராவூரணி, கீரமங்கலம், ஆலங்குடி பகுதியை சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீடபு பணித்துறையினர் விரைந்து வந்து 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து பேராவூரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments:
Post a Comment