Saturday, 2 April 2016

அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற வைகோவிற்குத் தகுதி இல்லை - ஜவாஹிருல்லா!


கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலைக்கழித்ததாலேயே, அதிமுக கூட்டணியிலிருந்து விலக நேரிட்டதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 
நியூஸ்7 தமிழின் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, அடிக்கடி அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்குத் தகுதி இல்லை என்றார். கூட்டணி கட்சித் தலைவர்களை வைகோ மதிப்பதில்லை என்றும் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டினார். மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துபேச பலமுறை முயன்றும், கடைசி வரை அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என ஜவாஹிருல்லா தெரிவித்தார். 

No comments:

Post a Comment