Saturday, 2 April 2016

தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி அளிப்பவர்கள் மீது கூட்டு பொருளாதார தடை


லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி அளிப்பவர்கள் மீது அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் கூட்டு பொருளாதார தடை விதித்துள்ளன. 
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை இந்தியா வரவேற்றுள்ளது. லஷ்கர்-இ-தொய்பா, அல்கொய்தா, தலீபான் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக உலக நாடுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி அளித்து வரும் 4 பேர் மற்றும் 2 நிறுவனங்கள் மீது அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் பொருளாதார தடை விதித்துள்ளன. 
நவீத் உமர், அப்துல் அஜிஸ், நுரிஸ்தானி, முகமது இஜாஸ் சாப்ராஸ், ஜாகி உர் ரகுமான் லக்வி ஆகியோர் மீதும் பாகிஸ்தானை சேர்ந்த அல் ரஹ்மா நல அமைப்பு மற்றும் ஜாமியா அசரியா மதரசா ஆகியவற்றின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. 
தெற்கு ஆசிய நாடுகளில் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்காக அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் கூட்டு நடவடிக்கை எடுத்திருப்பது இது இரண்டாவது முறை ஆகும்.
http://ns7.tv/ta/economic-embargo-financial-assistance-terrorist-organizations-providers.html

No comments:

Post a Comment