Saturday, 2 April 2016

சவுதி அரேபியாவில் தவிக்கும் மீனவர்களை தாயகம் கொண்டுவர பிரதமருக்கு முதல்வர் கடிதம்.


சவுதி அரேபியாவில் தவிக்கும் 63 மீனவர்களை தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், சவுதி அரேபியாவுக்கு 2013ம் ஆண்டு சென்ற 62 தமிழக மீனவர்கள் மற்றும் ஒரு கேரள மீனவர், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.  
ஆனால், அவர்களுக்கான ஊதியத்தை அந்த நிறுவனம் முறையாக வழங்காத காரணத்தால், தங்களின் குடும்பத்தினருக்கு பணம் அனுப்ப முடியாமல் தமிழக மீனவர்கள் தவித்து வருவதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும், சவுதியில் இருந்து இந்தியா திரும்ப முடியாத நிலையும், தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழக மீனவர்களை தாயகம் அழைத்து வர தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
http://ns7.tv/ta/jayalalithaa-letter-modi-release-tamil-fisherman-saudi-arabia.html

No comments:

Post a Comment