Tuesday, 19 April 2016

மனித நேய மக்கள் கட்சியின் சின்னம் வெளியிடப்பட்டது


சென்னை ராயபுரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் "cup & saucer" சின்னத்தை, அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று வெளியிட்டார்.
திமுக கூட்டணியில் இணைந்துள்ள மனிதநேய மக்கள் கட்சி நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் அக்கட்சியின் சின்னம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையை அடுத்து ராயபுரத்தில் இன்று  நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தேர்தல் ஆணையம் அறிவித்த "cup & saucer" சின்னத்தை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, ராமநாதபுரத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்தார்.

No comments:

Post a Comment