புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளரை மாற்றக்கோரி கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினர் 5வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்.கோ. சதீஷை மாற்ற வலியுறுத்தி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து ஆலங்குடி தொகுதியில் அக்கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, வடகாட்டில் சாலையில் படுத்துக்கொண்டு திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.கொத்தமங்கலம் வாடிமாநகர் கடைவீதியில் கூடிய 1000-க்கும் மேற்பட்ட திமுகவினர் வேட்பாளர் சதீஷை மாற்ற வலியுறுத்தியும், தெற்கு மாவட்டச் செயலர் கே.பி.கே. தங்கவேலுவுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக வேட்பாளருக்கு எதிராக 5-வது நாளாக நடைபெறும் போராட்டத்தால் ஆலங்குடி தொகுதி அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment