கண் பார்வை இழந்தவர்கள், சுயமாக நடக்க உதவி செய்யும் சாதனத்தை கண்டுபிடித்துள்ளார் இந்திய மாணவர் ஒருவர்.
ஹரியானாவை சேர்ந்த 21 வயது பொறியியல் மாணவர் அபினவ் வர்மா, இவர் கண் பார்வை இல்லாத மாற்று திறனாளிகள் யாருடைய துணையும் இல்லாமல் அனைத்து வேலைகளையும் இயல்பாக செய்ய நேரடி ப்ரெய்லி ( Live Braille) சாதனத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த நேரடி ப்ரெய்லி சாதனத்தை கன் பார்வை இல்லாதவர்கள், அணிந்து கொண்டு, உலகை புதிய முறையில் காண, நடக்க, படியில் ஏறி, இறங்க என தங்களின் அனைத்து வேலைகளையும் தாங்களாகவே பார்த்துக்கொள்ளலாம்.
இச்சாதனத்தை அணிந்திருப்பவர்கள், திசை, வேகம், பொருளின் வகை, அல்லது மனிதர்கள் இருப்பதை 4 மீட்டர் தொலைவுக்குள் உணந்துகொள்ளும், மேலும் அதிர்வு அலைகளை அனுப்பி அதன்மூலமாக உணரும் வகையில் இச்சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கள் பார்வை இல்லாதவர்கள் இனி நடக்க குச்சிகளை உபயோகிக்க தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனத்தை உருவாக்கியதோடு அல்லாமல், EmbroS என்ற நிறுவனத்தையும் தொடங்கி அதன் மூலம் இச்சாதனத்தை சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் வர்மா. இதனால் 21 வயதிலேயே மாணவர், கண்டுபிடிப்பாளர், தொழில்முனைவர் என்று முப்பரிமான அவதாரம் எடுத்துள்ளார் அபினவ் வர்மா.
காமிக்ஸ் புத்தகங்களை படித்தால் அதனால் ஈர்க்கப்பட்டு இதனை உருவாக்கியதாகவும், மேலும், சூப்பர் ஹீரோ படமான அயர்ன் மேன் (IRON MAN) படத்தில் வருவதை போல சூட் தயாரிப்பதே அடுத்த இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்காக உழைப்பதே லட்சியம் என்று கூறும் அபினவின் கண்டுபிடிப்பு, உலகலவில் கண்பார்வையற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பது நிச்சயமாகும்..
Live Braille சாதனத்தின் செயல்பாடு பற்றி அபினவ் வர்மா விளக்குகிறார்:
No comments:
Post a Comment