Monday, 4 April 2016

பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியின் அஇஅதிமுக வேட்பாளராக பேராவூரணி சட்டமன்றத்தொகுதி அஇஅதிமுக செயலாளர் மா.கோவிந்தராஜனுக்கு வாய்ப்பு ::


பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியின் அஇஅதிமுக வேட்பாளராக பேராவூரணி சட்டமன்றத்தொகுதி அஇஅதிமுக செயலாளர் மா.கோவிந்தராஜனுக்கு வாய்ப்பு :: அஇஅதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் தகவல்.
தமிழகத்தில் எதிர்வரும் மே.16 ஆம் தேதி சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், பேராவூரணி உட்பட தமிழகத்தின் 227 தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது.
இதன்படி தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியின் அஇஅதிமுக வேட்பாளராக மா.கோவிந்தராஜன் என்பவரை அறிவித்துள்ளார்.
பேராவூரணியின் 1 வது வார்டில் வசித்துவரும் இவர் பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியின் அஇஅதிமுக செயலாராக உள்ளார். பல வருடங்களாக அஇஅதிமுக கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ள இவருக்கு முதன்முறையாக பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
பேராவூரணியில் தமிழக அமைச்சர் வைத்திலிங்கம் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் உலாவி வந்த நிலையில் இவர் அதிமுகவின் பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment