Monday, 4 April 2016

கருணாநிதி- குலாம்நபி சந்திப்பில் உடன்பாடு திமுக அணியில் காங்.க்கு 41 தொகுதி எந்தெந்த தொகுதிகள்? மாலையில் பேச்சு


சென்னை: திமுக தலைவர் கருணாநிதியுடன், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒப்பந்தத்தில்கையெழுத்திடப்பட்டது. மாலையில் தொகுதியை அடையாளம் காண பேச்சுவார்த்தை நடக்கிறது.தமிழகத்தில் மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி, பாமக என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. ஏற்கனவே இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment