உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமானது, சிறுபான்மை அந்தஸ்தை மீண்டும் பெற ஆதரவளிக்கக் கோரி, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜமீருத்தீன் ஷா உள்பட 5 பேர் கொண்ட குழுவினர், பிரதமர் மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பின்போது, தங்களது கோரிக்கை மனுவை பிரதமரிடம் அக்குழுவினர் அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா, மதச்சார்பற்ற நாடு. நமது அரசமைப்பின் 31-ஆவது பிரிவின்கீழ் கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கான அடிப்படை உரிமை சிறுபான்மையினருக்கு உள்ளது. இந்த விவகாரத்தை மத்திய அரசு பரிவோடு கையாள்வது, சிறுபான்மையின இளைஞர்கள் மீது நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்க உதவும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமானது, கடந்த 1951-ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தின்கீழ் அரசால் அமைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அதற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க முடியாது என்று ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 1967-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment