மதுரை அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரிடம் வங்கி அதிகாரி போல பேசி, ஏடிஎம் ரகசிய எண்ணைப் பெற்று ரூ. 25 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை சிலைமான் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் வைரமணிகண்டன் (36). இவர் மதுரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், அரசு வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி, இவரது செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபர், இவர் கணக்கு வைத்துள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ளார்.
அப்போது, வைரமணிகண்டனின், ஏடிஎம் அட்டையை 2040-ஆம் ஆண்டு வரை கால நீட்டிப்பு செய்யவுள்ளதாகக் கூறி, ரகசிய குறியீட்டு எண்ணைக் கேட்டார். இதை நம்பி வைரமணிகண்டன், குறியீட்டு எண்ணைத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சில நிமிஷங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
இதுகுறித்து வைரமணிகண்டன் சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment