Tuesday, 2 February 2016

பிரதமர் மோடிக்கு சொந்தமான கார் ஏதும் இல்லை:டெல்லியில் எந்த வங்கிகளிலும் கணக்கு இல்லை


பிரதமர் மோடிக்கு சொந்தமான கார் ஏதும் இல்லை என்றும், டெல்லியில் உள்ள எந்த வங்கிகளிலும் கணக்கு வைத்திருக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர மோடி கடந்த 2014–ம் ஆண்டு மே 26–ந் தேதி பிரதமராக பதவி ஏற்றார். அவரது சொத்து மதிப்பு பற்றிய விவரங்களை  பிரதமர் அலுவலகத்தின் இணையதள பக்கத்தில் கடந்த 30–ந் தேதி மோடியின் சொத்து குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
இது குறித்து வருமாறு:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 26, 2014 அன்று பிரதமர் பதவியை ஏற்றார். இதுவரைக்கும் அவருக்கு சொந்த காரோ விமானமோ,கப்பலோ, சொந்தமாக இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமராக இருந்தும் கூட அவர் டெல்லியில் உள்ள எந்த ஒரு வங்கிகளிலும் வங்கி கணக்க்கு வைத்திருக்கவில்லை.
இவ்வாறு பிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு குஜராத்தில் ரூ.1 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும், கையிருப்பாக 4,700 ரூபாய் இருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment