பதிவு செய்த நேரம்:2016-01-03 17:29:22
ரியாத்: எண்ணெய் வளம் மிகுந்த நாடான சவூதி அரேபியாவில்தான் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக உலகின் மிகப்பெரிய மகளிர் பல்கலை கழகம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைகழகம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ளது. ரியாத்தில் 1970ல் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைகழகம் தொடக்கத்தில் Riyadh University for Women என்ற பெயரில் இருந்தது பின்பு இளவரசி நூரா பல்கலைகழகம் (princess noura bin abdul Rahman university(PNU) பெயரில் 2008ம் ஆண்டு மாற்றம் பெற்றது. பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் 60 ஆயிரம் பேர் கல்வி கற்கின்றனர்.
இங்கு 50000 மாணவிகள் ஒரே நேரத்தில் கல்வி கற்கும் விதமாக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் மட்டும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்களுடன் மிகப் பெரும் நூலகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 12 ஆயிரம் மாணவிகள் தங்கி கல்வி கற்க ஹாஸ்டல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதை ஒட்டியே மாணவிகளுக்கான உடற்பயிற்சி கூடமும், விளையாட்டு மைதானமும் சிறந்த முறையில் கட்டப்பட்டுள்ளது. பல்கலைக் கழகம் மிகவும் பெரிது என்பதால் அனைத்து துறைகளையும் இணைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் சேவையை இங்கு பயன்படுத்துகிறார்கள்
No comments:
Post a Comment