Sunday, 3 January 2016

துபாய் ஹோட்டல் தீயணைப்பு பணியில் பங்கேற்ற‌ துபாய் ஆட்சியாளர் மகன்



பதிவு செய்த நேரம்:2016-01-03 16:25:35


துபாய்: துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா அருகே தனியார்  நட்சத்திர ஹோட்டலில்  ஒரு பகுதியில் இரவு புத்தாண்டு தொடங்க சில மணி நேரங்கள் இருந்த நிலையில் தீவிபத்து ஏற்பட்டது. புத்தாண்டையோட்டி புர்ஜ் கலிபா அருகே வாண வேடிக்கைகளை காண‌  அப்பகுதியில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்திருந்த நிலையில் பெரிய விபத்து ஏற்பட்டு விடாமல் அரசு நிர்வாகம் உடனடியாக தீயை அணைக்க‌ தேவையான நடவடிக்கைகள் எடுத்து சில மணிநேரங்களில் தீயை அனைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஹோட்டல் தீவிபத்தில் 14 பேர் சிறிய அளவில் காயமடைந்தனர். உடனடியாக மருத்துவ முதலுதவி செய்யப்பட்டது.

புத்தாண்டில் வாணவேடிக்கைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை  காண்பதற்கு உலகம் முழுவதும் புர்ஜ் கலிபா பகுதிக்கு  சுற்றுலா பயணிகள் குவிந்திருந்த‌ நிலையில்  தீவிபத்து உடனடியாக சீர்செய்யப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பிரம்மாண்ட‌ வாணவேடிக்கை உள்ளிட்ட புத்தாண்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படாமல் அனைத்தும் முன் திட்டமிட்டபடி நடைபெற்றது.

இது குறித்து தீயணைப்புபடையினர் மற்றும் மீட்பு படையினரின் சிறப்பான பணியை பாராட்டி துபாய் ஆட்சியாளரும் அமீரக பிரதமரும், துணை அதிபருமான மேதகு ஷேக் முஹம்மது பின் ராஷித்  அல் மக்தூம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுருந்தார் மேலும் அக்குழுவினரை நேரிலும் பாராட்டினார்.

மேலும் தீவிபத்தின் போது சம்பவ இடத்திற்கு வந்த துபாய் ஆட்சியாளர் மகன் ஷேக் மன்சூர் பின் முஹம்மது  தீயணைப்புதுறை வீரர் உடை அணிந்து நேரடியாக பணியாற்றினார். சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிகிறது

No comments:

Post a Comment