Tuesday, 4 October 2016

ஐ.எஸ். தீவிரவாதி செய்தி விவகாரம். மன்னிப்பு கேட்குமா பாலிமர் டிவி?


நேற்று பாலிமர் டிவியில் கோவையில் ஐ.எஸ்.ஐ. தீவிரவாதி கைது என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈராக், சிரியாவில் உள்ள தீவிரவாத இயக்கம் தமிழகத்திலும் காலூன்றிவிட்டதோ என அனைவரும் அச்சப்பட்டு இருக்கும் நிலையில் இதுவொரு பொய்யான செய்தி என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கோவை யூசூப் அவர்கள் இதுகுறித்து பாலிபர் நிர்வாகத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது கடைசி வரை பாலிமர் நிர்வாகத்தினர் மழுப்பலாக பதில் கூறியதாக தெரிகிறது. 
உண்மையில் கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவர்கள், ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருக்கின்றார்களோ என்ற சந்தேகத்தில் விசாரணைக்காக மட்டுமே காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் அவர்கள் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் கைது என்ற செய்தியை கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஸ்குரோலில் ஓடவிட்ட பாலிமர் டிவி, விடுவிக்கப்பட்ட செய்தியை தெரிவிக்கவில்லை என்று கோவை யூசூப், பாலிமர் டிவி நிர்வாகத்திடம் கண்டனம் தெரிவித்த ஆடியோ ஒன்று வெகுவேகமாக தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அந்த முஸ்லீம் சகோதரர் கேட்பது ஒன்றே ஒன்றுதான். உண்மையில் கைது செய்யப்பட்டவர் ஐ.எஸ்,தீவிரவாதிகள் என்றால் அதற்குரிய ஆதாரத்தை தெரிவியுங்கள். அல்லது. தவறுதலாக செய்தி வெளியிட்டதற்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் என்பதுதான். இதை பாலிமர் டிவி நிர்வாகம் செய்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment