சமையல் சிலிண்டர் மானியம் பெற ஆதார் அட்டை கட்டாயம்!
சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை, வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அரசின் மானியங்களைப் பெற ஆதார் அட்டை அவசியமில்லை என அறிவித்த மத்திய அரசு, பின்பு சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் அவசியம் எனக் கூறியது.
ஆதார் எண்ணை பதிவு செய்யாதவர்களுக்கு மானியம் நிறுத்தப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
எனவே, செப்டம்பர் இறுதிக்குள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டுமென மத்திய அரசு காலக்கெடு விதித்திருந்தது.
இந்நிலையில் சமையல் எரிவாயு மானியத்திற்கு ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அதன்படி, வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, அதற்குள் ஆதார் எண்ணை பதிவு செய்து, அரசின் மானியத்தை பெறலாம் என்றும் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment