புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணையபோவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முகேஷ் அம்பானி அறிவித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ திட்டம் தொலை தொடர்பு துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. இது வோடோபோன், ஏர்டெல், ஏர்செல் உள்ளிட்ட பிற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி உள்ளது.
இந்நிலையில் இந்த சவாலை எதிர்கொள்ளும் விதமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனமும் ஏர்செல் நிறுவனமும் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அளவில் ஏர்செல் நிறுவனம் முன்னிலையில் உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதன் மூலம் அந்நிறுவனங்களின் மொத்த மதிப்பு சுமார் 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என கருதப்படுகிறது. அதேசமயம், இரு நிறுவனங்களுக்கும் சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இரு நிறுவனங்கள் இணைந்தால் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக மாறும். இது இந்திய தொலைதொடர்பு துறையில் மிகப்பெரிய ஒருங்கிணைப்பாகும்.
தற்போது வோடோபோன் நிறுவனத்திற்கு 20 கோடி வாடிக்கையாளர்களும் ஐடியா நிறுவனத்திற்கு 17.5 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர். ஐடியா நிறுவனமும் வருங்காலத்தில் வேறு ஒரு நிறுவனத்துடன் இணைய போவதாகவும் சொல்லப்படுகிறது
No comments:
Post a Comment