Wednesday, 14 September 2016

கர்நாடகாவின் மாண்டியாவில் தருமபுரியை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தை காரோடு எரித்து கொல்ல முயற்சி!


கர்நடகா வன்முறையில் உயிர் பிழைத்து தப்பித்து வந்த தமிழக முஸ்லிம் குடும்பம் அவர்களது வாடகை ஓட்டும் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது . 
தருமபுரி: கர்நாடகாவின் மாண்டியாவில் தருமபுரியைச் சேர்ந்த நவாஸ்பாஷா என்பவர் குடும்பத்தை காரோடு எரித்து கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த நவாஸ் பாஷா என்பவர் இன்று அம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனுவை அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் நவாஸ் பாஷா கூறியதாவது:
தம்பி மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊரான கர்நாடகாவின் மாண்டியாவிற்கு சென்றிருக்கிறார்.
அவரை பார்ப்பதற்காக கடந்த 11-ந் தேதி உறவினர்களுடன் நானும் சென்றிருந்தேன்.
மறுநாள் நாங்கள் காரில் தமிழகம் திரும்பி கொண்டிருந்தோம்.காரில் என்னுடன் சேர்த்து மொத்தமாக
3 ஆண்கள் 4 பெண்கள் 3 குழந்தைகள் இருந்னர்.
அப்போது மாண்டியாவின் எட்ஜிகரை என்ற புறநகர் பகுதியில் உள்ள நந்தினி பால் டிப்போ அருகில் எங்கள் காரான சுமோ வாகணம் மாலை 3:15 மணியளவில் வந்துகொண்டிருந்தது.
திடீரென ஒரு கும்பல் நாங்கள் வந்த காரின் தமிழக பதிவு எண்ணை
(வாகண எண் TN30 AQ5689) பார்த்துவிட்டு அப்படியே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்தனர்.இதனால் பதறியடித்து நாங்கள் வெளியேறி அருகே இருந்த காட்டுக்குள் ஓடினோம்.
பின்னர் பல்வேறு சிரமங்களுக்கு இடையே ரயில் மூலம் தப்பித்து சொந்த ஊர் திரும்பியுள்ளோம். நாங்கள் இழந்த கார் மற்றும் உடமைகளுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு நவாஸ் பாஷா கூறினார்.

No comments:

Post a Comment