Friday, 16 September 2016

இஸ்லாத்தை தழுவி ஹஜ் கடமையை நிறைவேற்றிய இங்கிலாந்து தூதர் !

         

      சவூதி அரேபியா, செப்.16
மேற்கத்திய நாடுகளில் யூத, கிருஸ்தவ சதிகளால் இஸ்லாம் தூற்றப்பட்டும் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டும் வரும் நிலையில் அத்தகைய சதிகார கும்பலுக்கு மரண அடி தரும் வகையில் அதே மேற்கத்திய நாட்டு பிரபலம் ஒருவர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுள்ளார்.
சவுதி அரேபியாவிற்கான பிரிட்டிஷ் தூதர் சைமன் காலிஸ் அவர்கள் இஸ்லாத்தை தழுவி தனது மனைவியுடன் இந்த வருட ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார்.

பிரிட்டனிலிருந்து வந்த 19,000 ஹஜ் யாத்ரீகர்களுடன் அவரும் தம் கடமையை நிறைவேற்றியதை பிரிட்டனுக்கான ஹஜ் கவுன்சில் மனமுவந்து வரவேற்றுள்ளது.
மேலும் சவுதி இளவரசி பாஸ்மாஹ் பின்த் சவூது அவர்களும் டிவிட்டர் வழியாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சுமார் 30 ஆண்டுகளாக இஸ்லாமிய உலகில் பல்வேறு அரசு பொறுப்புக்களை சுமந்து வாழ்வை கழித்துள்ள சைமன் காலிஸ் அவர்கள் அரபி மொழியை முறையாக பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: Arab News

No comments:

Post a Comment