சவுதி அரேபியன் ஏர் லைன்ஸ் விமானம் 872 என்ற விமானம் ஜித்தாவில் இருந்து இன்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியது. அப்போது விமான பைலட் தவறுதலாக விமான கடத்தலின் போது பயன்படுத்தும் எச்சரிக்கை அலாரத்தை பயன்படுத்தி விட்டார்.
இதை தொடர்ந்து மணிலா விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து சோதனை செய்தனர்.பின்னர் எந்த மிரட்டலும் இல்லை என தெரியவந்தது. இதை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கபட்டனர். இந்த தவறால் 2 மணி நேரம் பயணிகள் விமானத்திலேயே இருக்க நேரிட்டது.
தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. பைலட் தவறுதலாக அவசர அழைப்பு மணியை அழுத்தி விட்டார். என மணிலா போலீஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment