“மதரீதியிலான சட்டவிதிகளில் உச்சநீதிமன்றம் தலையிடமுடியாது”
மூன்று முறை 'தலாக்' என்று கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறையை எதிர்த்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் தாக்கல் செய்துள்ள வழக்கில், அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், சமூக மாற்றம் என்ற பெயரில் குரானில் சொல்லப்பட்ட சட்ட முறைகளை
உச்ச நீதிமன்றம் மாற்றி விவரிக்க முடியாது என்றும்,
உச்ச நீதிமன்றம் மாற்றி விவரிக்க முடியாது என்றும்,
தனிப்பட்ட மதரீதியான சட்டவிதிமுறைகளை உச்ச நீதிமன்றம் மாற்றியமைக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மூன்று முறை, 'தலாக்' எனக் கூறி, விவாகரத்து செய்யும் முறையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதுகுறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment