பொதுவாகவே மொபைல் போன்களை அதிகமாகப் பயன்படுத்தும் போது கைகள் லேசான சூடாவதை உணரலாம். உண்மையிலேயே மொபைல் போன் சூடாவதைத் தடுக்கவே முடியாது. ஆனால் உங்கள் போன் அதிக சூடானால் நிச்சயம் இது கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனை எனலாம்.
மொபைல் போன் அதிகளவு சூடாகும் போது, கருவியினுள் இருக்கும் பாகங்கள் சீக்கிரம் பழுதாகக்கூடும். கருவி எதனால் சூடாகின்றது என்பதை அறிந்தால், மொபைல் போன் சூடாவதைக் குறைக்க முடியும். கீழ் வரும் ஸ்லைடர்களில் மொபைல் போன் ஏன் சூடாகின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள்..
இயக்கம் நடைபெறும் போது வெப்பம் உண்டாகும் என்பதை நாம் பள்ளிகளில் இயற்பியல் பாடத்தில் படித்திருப்போம். இதே தான் மொபைல் போன்களிலும் நடைபெறுகின்றது. கருவியினுள் உண்டாகும் வெப்பமும் அதில் பாயும் மின்சாரமும் சீராக இருக்கும். இதனால் அதிகளவு கேமிங் விளையாடும் போது கருவி அதிகளவு சூடாகக்கூடும்.
ஸ்மார்ட்போன்கள் ஏன் சூடாகின்றன
ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் எஸ்ஓசி'கள் கருவிகளில் ஏற்படும் வெப்பத்தைத் தாங்குமளவு வடிவமைக்கப்படும், ஆனால் இவை ஓரளவு வெப்பத்தை மட்டுமே கட்டுப்படுத்தும். ஒரு வேலைக் கருவி அதிகளவு வெப்பமாகும் நிலையில் கருவியின் பிராசஸர் வேகம் குறையும், இதனால் கருவியின் செயல் வேகமும் குறையும். பிரச்சனை ஏற்படுமளவு சூடாகும் போது கருவியின் திரையில் எச்சரிக்கை தகவல் கிடைக்கும்.
அதிக சூடாவது பிரச்சனையே
ஹார்டுவேர் அளவுக்கு மீறிப் பயன்படுத்தும் போது கருவியின் வெப்பம் அதிகரிக்கும். மேலும் கருவியின் சிபியு'வினை அதிகம் பயன்படுத்தும் செயலிகளும் கருவியினை அதிகளவு சூடாக்கும். மல்டி டாஸ்கிங், விட்ஜெட், கனெக்டிவிட்டி போன்றவையும் கருவியை சூடேற்றும்.
காரணம் என்ன
கருவி சூடாவது அதிகளவு பயன்படுத்துவதோடு இதர அம்சங்களும் இருக்கின்றன. நீண்ட நேரம் நேரடியாகச் சூரிய வெப்பத்தின் கீழ் இருக்கும் போதும் கருவியின் வேகம் அதிகரிக்கக்கூடும். இவ்வாறு ஏற்படும் போது கருவியினுள் இருக்கும் வன்பொருள் கோளாறு உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
மற்ற காரணங்கள்
தற்சமயம் சந்தையில் கிடைப்பதில் சிறந்த பேட்டரிகளாக லி-அயன் 'Li-Ion' வகை இருக்கின்றது. எனினும் இவற்றை பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. லி-அயன் பேட்டரிகள் நீண்ட நாள் பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அவற்றில் பிரச்சனை ஏற்படத் துவங்கும். இந்தப் பிரச்சனை தீவிரமாக அதிக நாட்கள் ஆகும். மேலும் இவ்வகை பேட்டரிகள் சீக்கிரமே வெப்பமடையும், இதனால் அதிகளவு அபாயம் கொண்டவை எனலாம்.
பேட்டரி
கருவிகள் 100 சதவீதம் சார்ஜ் ஆனதும் சார்ஜரை நீக்காமல் இருக்கும் போது கருவி அதிகளவு சூடாகும். மேலும் அதிக முறை பேட்டரிகளை 100 சதவீதம் சார்ஜ் செய்ய கூடாது. கருவியின் பேட்டரி அளவு 30 முதல் 80 சதவீதம் மிகாமல் சார்ஜ் இருப்பதை உறுதி செய்து அதற்கேற்ப அவற்றை சார்ஜ் செய்தல் நல்லது.
அதிகளவு சாக்ஜ் செய்வது
மொபைல் போன் அதிகளவு சூடாகும் போது, ஒரு கட்டத்தில் போனின் இயக்கை நிறுத்திவிடும். மொபைல் அதிகளவு சூடாகும் போது சில சமயம் சிப்செட் கோளாறுகளை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கின்றது.
எஸ்ஒசி
எஸ்ஒசி அதிகளவு சூடாவதை தடுக்கச் சக்தி வாய்ந்த அதிக மெமரி கொண்ட கேம்களை விளையாடுவதை நிறுத்த வேண்டும். பொதுவாக இது போன்ற கேம்கள் அதிகளவு பிரசாஸர் சக்தியைப் பயன்படுத்தும்.
வழிமுறை
No comments:
Post a Comment