Wednesday, 3 August 2016

சவுதி அரேபியாவில் வேலை இழந்து தவிக்கும் இந்தியர்கள்: தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கை தீவிரம்.

சவுதி:

    சவுதி அரேபியாவில் வேலை இழந்து தவித்து வரும் 10,000 இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் சவுதி ஜித்தா வந்தடைந்தார்:
    முன்னதாக இரவு டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சவுதியில் நிலவி வரும் சூழ்நிலையை முழுமையாக ஆராய்ந்து, அதன் பின்னர் இந்தியர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், இது போன்ற பிரச்சனைகளை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
     இதிலிருந்து விடுபடுவதற்கு அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள், வெளிநாடுகளில் வேலை செய்பவர்களை முழுமையாக கண்காணித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சர்வதேச அளிவில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததால் சவுதியில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
   இதனால் எண்ணெய் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிந்த சுமார் 10,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஒரு வேலை உணவு கூட இல்லாத நிலையில் இருக்கும் அவர்களுக்கு சாப்பாடு வழங்கி பாதுகாப்பு வழங்கி வருகிறது அங்குள்ள இந்திய தூதரகம். இந்த நிலையில் தொழிலாளர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

No comments:

Post a Comment