Friday, 19 August 2016

துபாயில் பிறக்கும் வெளிநாட்டினர் குழந்தைகளுக்கான விசா நடைமுறை:

துபாய்:

    துபாயில் ரெஸிடென்ட் விசாவுடன் வசிக்கக்கூடிய அனைத்து வெளிநாட்டினரும் துபையில் பிறக்கும் தங்களின் குழந்தைகளுக்கு 120 நாட்களுக்குள் கட்டாயமாக முறையான ஆவணங்களை சமர்ப்பித்து ரெஸிடென்ட் விசா எடுக்க வேண்டும் தவறுபவர்கள் அபராதம் செலுத்த நேரிடும்.
   பிறந்த குழந்தைகளுக்கான விசா வேண்டும் ஆவணங்கள் என்பது தனியார் துறை, அரசுத்துறை மற்றும் சிறப்பு மண்டலப் பகுதி [ FREE  ZONES ] ஊழியர்கள் என சற்றே வேறுபடும்.
     தனியார் துறை ஊழியர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
       துபை General Directorate of Residency and Foreigners Affairs in Dubai (GDRFA) அறிவுறுத்தலின்படி, அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் சென்டர் வழியாக பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்களுடன் குழந்தையின் 2 போட்டோக்கள், குழந்தையின் அசல் பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழுடன் எமிரேட்ஸ் ஐடி விண்ணப்ப படிவ சான்றுடன் GDRFA அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
    மேலும், பெற்றோர்கள் இருவரின் பாஸ்போர்ட் மற்றும் விசா ஸ்டாம்ப் நகல்களுடன் இருவரின் எமிரேட்ஸ் ஐடியின் நகல்களும் இணைக்கப்பட வேண்டும்.
    சான்றழிக்கப்பட்ட வீட்டு ஒப்பந்தப் நகல் (Attested Tenancy Contract), சமீபத்திய தேவா ரசீது (DEWA Bill) மற்றும் பணி ஒப்பந்த பத்திரங்களுடன் (Labour Contract) உங்களின் அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் 3000 இருந்து 4000 திர்ஹங்களாக கூடுதல் படிகளுடன் (Allowances) இருக்க வேண்டும்.
     குழந்தை பிறந்து 120 நாட்கள் எனும் கருணை காலத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறும் ஒவ்வொரு நாளுக்கு 25 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும்.
     குழந்தையின் ரெஸிடென்ட் விசா விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2 அல்லது 3 வேலை நாட்களுக்குள் பாஸ்போர்ட்டில் விசா முத்திரை பதிந்து தரப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Source: Emirates 247

No comments:

Post a Comment