Wednesday, 17 August 2016

குவைத்தில் தனியார் கம்பெனியின் ஒப்பந்தம் திடிரெனரத்தானதால் 32 இந்தியர்கள் உப்பட 102 செவிலியர்கள் வேலை இழப்பு:

குவைத்:

                    இந்தியாவில் இருந்து ஒரு ஏஜென்சி மூலம் 6 முதல் 7 லட்சம் 
வரையில் வழங்கி குவைத்தின் ஒரு பிரபல மருந்தகத்தின் கீழ் உள்ள ஆம்புலன்ஸ்களில் வேலை செய்து வந்த இவர்களுக்கு வேலை பறிபோய் உள்ளது.
    ஆனால் ஒப்பந்த நேரத்தில் ஐந்து வருட ஒப்பந்தம் என்று தான் இந்த அளவு பணம் கடன்வாங்கி இந்த வேலைக்கு வந்துள்ளனர்.
தற்போது ஒரு வருடத்தில் தாயகம் திரும்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
   ஆனால் கம்பெனி தரப்பில் கூறப்பட்டுள்ள தகவல் படி இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வேலை இழப்பு குறித்து அறிவிப்பு கடிதங்கள் கொடுத்ததாகவும். வரும் ஆகஸ்டு 22 வரையிலான சம்பளம் இவர்களுக்கு வழங்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வேலை இழந்தவர்களில் இந்தியர்கள்,  பிலிப்பைன்ஸ், ஜோர்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள்.
    இதையடு‌த்து நேற்று வேலை இழந்த  இந்தியர்கள் குவைத் இந்திய தூதரக அதிகாரி சுனில் ஜெயினிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
Source : Asianet news

No comments:

Post a Comment