Wednesday, 3 August 2016

பாக்கெட்டில் வைத்திருந்த 'iphone' வெடித்து வாலிபரின் தொடை பொசுங்கியது!


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் Gareth Clear வயது 36, இவர் தனது இருசக்கர வாகனத்தில் பயணம் சென்றுகொண்டிருந்த போது, தனது பின் பாக்கெட்டில் வைத்திருந்த IPhone 6 மாடல் மொபைல் போன் பொசுங்கியதன் காரணமாக இவரின் பின் தொடையின் தோல் கருகியது.
தனது இருசக்கர வாகணத்தில் பயணம் மேற்கொண்டபோது, எதோ கருகும் வாசனை வந்ததாகவும், அச்சமயம் பின்னால் திரும்பி பார்த்த போது புகை வருவதைக் கண்டதாகவும், உடனே தடுமாறி வாகனத்தை நிறுத்தியுள்ளார் Gareth.
பின்னர், இவர் அணிந்திருந்த அரைக்கால் டிரசவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த தனது ஐபோன் எரிந்து உருகியுள்ளதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். நொடிப்பொழுதில் இச்சம்பவம் அறங்கேறியதாகவும், அழுத்தம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் Gareth தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் Gareth, இச்சம்பவம் குறித்து விசாரிப்பதாக ஆப்பிள் நிறுவனம் தனக்கு உறுதி அளித்திருப்பதாகவும்  தெரிவித்தார்

No comments:

Post a Comment