Wednesday, 3 August 2016

சட்டக்கல்லூரியில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 24 முஸ்லிம் மாணவர்கள் தேர்வு......!!


      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிர போராட்டத்தின் வாயிலாக கிடைக்கப்பெற்ற 3.5 சதவீத இட ஒதுக்கீட்டினால் இந்த கல்வியாண்டில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான முதல் கலந்தாய்வில் 24 முஸ்லிம் மாணவர்களுக்கு  சட்டக்கல்லூரியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அவர்களில் 14 ஆண்கள், 10 பெண்கள்.
நஜ்முதீன், நசீர் ஹூசைன், ஜபருல்லாஹ், ஃபசீலா பாத்திமா, ஜீனத் பாத்திமா, ஷரிபா பானு, சதாம் ஹூசைன், நிஹால் அஹமத், ரியாஸ் கான், சிக்கந்தர்,
யாஸ்மீன், ஷப்னா, கான் சாஹிப், ரஜப் நிஷா, ஷேக் அப்துல்லாஹ், ஷாஜிதா, முஹம்மது பாரூக், அம்மார் பிஸ்மி, அசிதா, ஷகாவுதீன், ஜீனத் சோபியா, அப்துர் ரஹ்மான் தாஹி, ஷேக் அப்துல் வகீல், முஹம்மது அசார்
ஆகியோர் முதல் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
லட்சக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்களை திரட்டி  மாநிலம் தழுவிய கும்பகோணம் பேரணி & மாநாடு,  மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம், மாநிலம் தழுவிய சிறைநிரப்பும் போராட்டம், சட்டசபை முற்றுகை போராட்ட அறிவிப்பு என்று ஆளும் வர்க்கத்திற்கு தொடர் நெருக்கடியை ஏற்படுத்தி எண்ணற்ற தியாகங்களினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெற்று தந்த இட ஒதுக்கீட்டினால் இஸ்லாமிய சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது.

No comments:

Post a Comment