Friday, 22 July 2016

துபாய் மற்றும் அமீரகத்தில் மாதச்சம்பளம் 2000 திர்ஹம்ஸ்க்கு கீழ் குறைவாக பெரும் தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி - நிறுவனங்களுக்கு அமீரகம் உத்தரவு:

  
   அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 10 விகிதத்தினரே அமீரக குடிமக்கள் மற்ற அனைவரும் பணி நிமித்தமாக உலக முழுவதிலிருந்தும் குடியேறியவர்களே. அதிலும் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற தெற்காசிய நாட்டவர்களில் பெரும்பாலோர் மிகக் குறைந்து ஊதியத்திற்கு பணிபுரிகின்ற தொழிலாளர்களே.
    எதிர்வரும் டிசம்பர் மாதம் 2016 முதல் குறைந்தபட்சம் 50 தொழிலாளர்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரியும் அனைத்து கம்பெனிகளும் மிகக்குறைந்த சம்பளமாக $540 (540 டாலர் = 2000 திர்ஹம்) மற்றும் அதற்கு கீழ் சம்பளம் பெறும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கம்பெனியின் செலவிலேயே சுகாதாரமான தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் இதைனை மீறும் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இதன் தொடர்பான தொடர் சோதனைகளும் நடத்தப்பெறும் அமீரக மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
   இந்த உத்தரவின் மூலம் பல லட்சக்கணக்கான தெற்கு ஆசிய நாட்டவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதேபோல் கடந்த வருடம் ஊழியர்கள் தங்களுடைய ஒப்பந்தத்தை இடைமுறித்து கொண்டு புதிய நிறுவனங்களில் சேர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார் அமீரக மனிதவளத்துறை அமைச்சர் சகர் கோபாஷ் அவர்கள்.
   கட்டுமானம், பராமரிப்பு போன்ற பல துறைகளில் கம்பெனி தங்குமிடம் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் குறைவான குறைந்தபட்ச சம்பளத்தை குறிப்பிட்டு சலுகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

No comments:

Post a Comment