Thursday, 2 June 2016

5 வருடங்களாக ஒரே ஒரு மாணவிக்காக இயங்கி வந்த பள்ளி மூடப்படும் அபாயம்


சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 5 வருடங்களாக ஒரே ஒரு மாணவிக்காக இயங்கி வந்த பள்ளி தற்போது மூடப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. செய்யாலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்த ஒரு மாணவிக்காக தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்களும், ஒரு துப்புறவு பணியாளரும் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது அந்த மாணவியும் படிப்பை முடித்து வேறு பள்ளிக்கு சென்றுவிட்டதால் அந்த பள்ளியை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. இதே போல் மானாமதுரையில் மானம்பாக்கி உள்ளிட்ட பல இடங்களில் ஓரிரு மாணவர்களுக்காக பள்ளிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அரசு பள்ளிகளில் சரியான வசதிகள் இல்லாததாலேயே மக்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்வதா அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அரசு இதனை கவனத்தில் கொண்டு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வழிவகுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை ஆகும்.

No comments:

Post a Comment