Thursday, 2 June 2016

ரமலான்: நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க ஜெ. உத்தரவு.


சென்னை: ரமலான் நோன்புக்காக 3 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
உலக முஸ்லீம்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது வழக்கம். இந்த ஆண்டு வரும் 6 அல்லது 7ம் தேதி ரமலான் நோன்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறையை பார்த்து தான் நோன்பு துவங்கும் என்பதால் தேதியை குறிப்பிட்டுக் கூற முடியாது.
ரமலான் மாதத்தை வரவேற்க உலக முஸ்லீம்கள் தயாராகிவிட்டனர். நோன்பு நேரத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு திறக்க கஞ்சி காய்ச்சுவது வழக்கம். தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
ரமலான் நோன்புக்காக மாநிலத்தில் உள்ள 3 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படும். ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment