Monday, 2 May 2016

பேராவூரணியில் வேட்புமனு தாக்கல் செய்தார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலதண்டாயுதம் :: தன் பெயரில் எந்த சொத்தும் இல்லை என வேட்புமனுவில் தகவல்.


பேராவூரணி
சட்டப்பேரவைத்தொகுதி
எதிர்வரும் மே.16 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத்தேர்தலை
சந்திக்கவுள்ள நிலையில்
வேட்புமனு தொடங்கி பல
நாட்களாகியும் யாரும்
வேட்புமனு தாக்கல்
செய்யாமலே இருந்தனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பேராவூரணியில்
போட்டியிடும் பாலதண்டாயுதம் தனது வேட்புமனுவை பேராவூரணி வட்டாட்சியர்
அலுவலகத்தில் தேர்தல்
நடத்தும் அலுவலரிடம் சமர்பித்தார்.
வேட்புமனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதி
வேட்பாளர் பாலதண்டாயுதம் வேட்பாளருக்கான
உறுதிமொழியையும்
எடுத்துக்கொண்டார்.
பேராவூரணி வட்டாட்சியர்
அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின்
பேராவூரணி
சட்டப்பேரவைத்தொகுதி
வேட்பாளர் பாலதண்டாயுதம் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தன் பெயரில் எந்த சொத்தும் இல்லை என
தெரிவித்துள்ளார்.
பேராவூரணியை
அடுத்த கழனிவாசலை சேர்ந்த 37 வயதாகும் இவர், SSLC வரை படித்துள்ளார். மேலும் இவரது கையிருப்புத்தொகை ரூபாய் 50,000 எனவும், இவரது துணைவியின் கையிருப்புத்தொகை ரூ.10,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது வங்கி கணக்கில் ரூ.6500 உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவரது துணைவி ரூ.1,00,000 அளவிற்கு நகைகள் வைத்துள்ளதாக இந்த வேட்புமனுவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment