அமெரிக்காவில் இனப் பாகுப்பாட்டை களைய வலியுறுத்தி ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்ற இருசக்கர வாகன அமைதிப் பேரணி நியூயார்க் நகரில் நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதனால் அமெரிக்காவில் முஸ்லீம்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்ற இருசக்கர வாகன அமைதிப் பேரணி நடைபெற்றது.
அப்போது முஸ்லீம்கள் மீதான இன பாகுப்பாட்டை களைய வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியும், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பியும் ஏராளமானோர் பேரணியில் சென்றனர்
No comments:
Post a Comment