திருவாரூர் மாவட்டம் நாச்சிக்குளத்தில் தவ்ஹீத் பள்ளிவாசல் மீது தர்கா வணங்கிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தர்கா - கந்தூரி விழாவுக்காக அல்லாஹ்வுடைய பள்ளிவாசல் மீது தாக்குதல் தொடுப்பது தான் மார்க்கம் போதித்ததா ?
ஒவ்வொரு ஊர் தர்காவிலும் ஆடல், பாடல், கூத்து, கும்மாளம் போடும் தர்கா வணங்கிகள் என்றாவது ஓர் நாள் இதே ஆடல், பாடல், கூத்து, கும்மாளங்களை சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் போட்டது உண்டா ?
தர்காவை குப்பையாக நினைத்ததினால் தான் கூத்து கும்மாளம் நடத்த முடிகிறது, பள்ளிவாசல் அல்லாஹ்வுக்கு உரியது என்று நினைத்ததினால் தான் அங்கு எந்த அனாச்சாரத்தையும் செய்ய மனசு வருவதில்லை,
நாம் இங்கு கேட்க விரும்புவது என்னவென்றால் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலை அல்லாஹ்வுடைய பள்ளிவாசலாக பார்த்தவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலை அல்லாஹ்வுடைய பள்ளிவாசலாக பார்க்காதது ஏன் ?
உலகிலுள்ள அனைத்து பள்ளிவாசலும் அல்லாஹ்வுடையது என்று நினைக்க வேண்டும்.
மனசாட்சி உள்ளவர்கள் அல்லாஹ்வுடைய அச்சம் உள்ளவர்கள் அநியாயத்தை கண்டிக்க வேண்டும்.
No comments:
Post a Comment