Saturday, 9 April 2016

மனிதர்கள் 10 ஆண்டுகள் கூடுதலாக வாழ மாத்திரை விஞ்ஞானிகள் தயாரிப்பு


வழக்கத்தை விட மனிதர்கள் நீண்ட காலம் உயிர் வாழ புதிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஐரோப்பியா நாடுகளை சேர்ந்த 2 நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினார்கள். 
பொதுவாக உடலில் உள்ள ஜி.எஸ்.கே. – 3 என்ற புரோட்டீன் மூலக்கூறுகள் மனிதர்களின் வாழ்நாளை குறைக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்தி ஆயுளை நீட்டுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
அதற்கு பழ வண்டுகள் பயன் படுத்தப்பட்டன. அவற்றின் உடலில் குறைந்த அளவில் லித்தியம் என்ற ரசாயன பொருட்களை செலுத்தினர். இதன் மூலம் அவை வழக்கத்தை விட 16 சதவீத அளவு கூடுதலாக உயிர் வாழ்ந்தன. 
அதே முறையில் புதிய மாத்திரை தயாரித்து மனிதர்கள் வழக்கத்தை விட கூடுதலாக 10 ஆண்டுகள் வாழ வழிவகை செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

No comments:

Post a Comment