Sunday, 10 April 2016

காவல்துறையை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம் - அலைகடலென திரண்டு வாரீர்....!!


திருவாரூர் மாவட்டம் நாச்சிக்குளத்தில் கடந்த 08.04.16 அன்று நடைபெற்ற தர்கா - கந்தூரி ஊர்வலத்தில் சென்றவர்கள் தவ்ஹீத் பள்ளிவாசல் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதாரமானது, மேலும் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒருவரின் மண்டை உடைந்தது, பேனர்கள் கிழிக்கப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளான தவ்ஹீத் ஜமாஅத்தினர் முத்துப்பேட்டை காவல்துறையில் புகார் அளித்தனர்.
முத்துப்பேட்டை காவல்துறையினர் சட்டத்தை மீறும் வகையில் சம்பந்தமே இல்லாமல் தவ்ஹீத் ஜமாஅத்தினரை வீடு புகுந்து கைது செய்து அராஜக தாண்டவம் ஆடியுள்ளனர்.
முத்துப்பேட்டை காவல்துறையை கண்டித்தும், பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய தர்கா வணங்கிகளை கண்டித்தும் திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
காலம் - 12.04.16
களம் - திருவாரூர்
இறையில்லத்தை தாக்கிய அயோக்கியர்களின் அராஜகப்போக்கை கண்டித்தும், சட்டத்தை தவறான வழியில் பயன்படுத்திய காவல்துறையின் ஆணவப்போக்கை கண்டித்தும் நடைபெறும் போராட்டத்திற்கு அலைகடலென திரண்டு வர அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

No comments:

Post a Comment