Wednesday, 20 April 2016

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா? நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை.


சிலரின் உடல்வாகு நோய்கள் எளிதில்தொற்றுக்கொள்ளும் வண்ணம் இருக்கும். 
அதற்கு ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்ளாதகாரணத்தால், வெள்ளை அணுக்கள் குறைந்து நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே காரணம். 
எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையைபின்பற்றுங்கள். 
பருப்பை வேகவிடும்போது, ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், வெந்தயம், சிறிது மிளகு, சீரகம் சேர்த்தே வேகவிடலாம். 
இதனால் ஒருநாள் வரை பருப்பு கெடாமல் இருக்கும். உடலில் சத்துக்களும் சேரும். காய்கறிகள், கூட்டு, சாம்பார் என எல்லாவற்றிலும் மஞ்சள்தூளைச் சேருங்கள்.
நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு நார்ச்சத்து 20 முதல் 40 கிராம் தேவை. பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் அன்றாடம் சாப்பிடுவதன் மூலம், ‘இன்டஸ்டினல் கேன்சர்’ வராமல் தடுக்கலாம். 
உணவில் தினமும் இரண்டு மூன்று வகைத் தானியங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். 
மூன்று நான்கு வகை வெவ்வேறு நிறப் பழங்களை தினமும் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். 
முட்டைக்கோஸ், வெள்ளை நிற வெங்காயம் மிகவும் நல்லது. தினமும் உணவில் வெங்காயம் சேருங்கள். கோஸை பொரியலாகவோ கூட்டாகவோ செய்து சாப்பிடலாம். 
தினமும் தக்காளி சேர்த்து ரசம், சாம்பார் செய்யுங்கள். தக்காளித் தொக்காகவும் செய்து சாதத்துடன் சாப்பிடலாம். 
காரம் தேவையெனில் மிளகாய் சேர்ப்பதைத் தவிர்த்து, மிளகு சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கும் நல்லது.

No comments:

Post a Comment