வேலையிலும் தொழுகையை தள்ளிப் போடக் கூடாது. நெடுந்தூரப் பயணத்தில் உள்ளவர்கள் தொழுகையை சேர்த்து தொழுவதற்கும் சுருக்கி தொழுவதற்கும் அனுமதியுண்டு.
தொழுகையை நமது வாழ்நாளில் என்றென்றும் நேரத்தில் தொழக் கூடியவர்களாக நம்மை மாற்றிக் கொள்வோமாக!
"தொழுகையை நிலை நிறுத்துங்கள்" (அல்குர்ஆன் 30:31)
"நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டுத் தடுக்கிறது" (அல்குர்ஆன் 107:45)
"மறுமையில் முதல் விசாரணை தொழுகையைக் குறித்துத்தான் இருக்கும்" என நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்
Thanks by சுவனப் பிரியன்
No comments:
Post a Comment