Monday, 21 March 2016

சவுதிக்கு உம்ரா சென்ற 19 யாத்ரீகர்கள் பஸ் விபத்தில் மரணம்!


சவுதி அரேபியா நாட்டுக்கு ‘உம்ரா’ புனித யாத்திரை செய்யவந்த 19 வெளிநாட்டினர் பஸ் விபத்தில் மரணமடைந்தனர், 
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன். 
எகிப்து நாட்டை சேர்ந்த சிலர் உம்ரா செய்வதற்காக சவுதியில் உள்ள ஜெட்டாவில் இருந்து மதினா நகரை நோக்கி சென்ற அந்த பஸ், அம்மான் நகரின் தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹிஜ்ரா நகர நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கோரவிபத்து ஏற்பட்டதாக சவுதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 
இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 20 எகிப்தியர்கள் பலியானதாகவும், 22 பேர் படுகாயமடைந்ததாகவும் உள்ளூர் போலீசார் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment